அழகு நாச்சியம்மன் கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா!
ADDED :3726 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அழகு நாச்சியம்மன் கோவிலில் கஞ்சி வார்த்தல் விழா நடந்தது. அதனையொட்டி, கடந்த 21ம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா, லவகுசா நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயலலிதா செய்திருந்தார்.