பழையசீவரம் கிராமத்தில் முட்புதருக்குள் இருக்கும் உற்சவ மண்டபம்!
ADDED :3726 days ago
வாலாஜாபாத்: பழையசீவரம் கிராமத்தில், முட்புதருக்குள் இருக்கும் உற்சவ மண்டபத்தை, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாஜாபாத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள, பழையசீவரம் கிராமத்தில், உற்சவ மண்டபம் உள்ளது. இந்த உற்சவ மண்டபம், இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மண்டபத்தில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பார்வேட்டை உற்சவத்திற்கு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், இம்மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். தற்போது, இம்மண்டபம் முட்புதருக்குள் சிக்கியுள்ளது. இதனால், இங்கு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உற்சவ மண்டபத்தை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.