துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் கொடியேற்றம்!
துாத்துக்குடி: துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. துாத்துக்குடியில் பனிமய மாதா சர்ச் உள்ளது. உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விழாவிற்கு வருகை தருவார்கள். ஆண்டு தோறும் ஜூலை 26 ல் துவங்கி ஆக., 6 ல் நிறைவு பெறும். ஆக., 5 ம் தேதி மாதா பவனி நடக்கும். கொடியேற்றம்: நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு சின்ன சர்ச்சில் இருந்து கொடி பவனி நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி,6 க்கு இரண்டாம் திருப்பலி,7.30க்கு கூட்டு திருப்பலியும், பிஷன் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பால்,பழம் வழங்கினர். பகல் 12 மணிக்கு லயன்ஸ் டவுன் பாதிரியார் அலாய்சியஸ், மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டினார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், ஜெபமாலை நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.
திருஉருவ பவனி: ஆக., 5 ம் தேதி மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி காலை 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. துாத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி பகல் 12 மணிக்கு நடக்கிறது. திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் மாலை 5.30 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடக்கிறது. விழா நாட்களில் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை,5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 க்கு இரண்டாம் திருப்பலி,பகல் 12 மணிக்கு 2 வது ஜெபமாலை, 3 க்கு 3 வது ஜெபமாலை, மறையுரை நடக்கும். இரவு 7.15 க்கு 4 வது ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.