உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா துவக்கம்

பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா துவக்கம்

திருத்தணி: மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 3ம் தேதி, தீ மிதி திருவிழா நடக்கிறது. திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு கிராமத்தில், மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, தீமிதி திருவிழா, நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒரு யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. துவக்க நாளில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்கினர்.அடுத்த மாதம், 3ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. அதுவரை தினமும், மூலவர் அம்மனுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும். மேலும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடக்கிறது. வரும், 30ம் தேதி, பக்தர்கள் உடலில் அலகு குத்தி, நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !