உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரக்ஷாஜாதேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

ரக்ஷாஜாதேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

கடலூர்: மேல்குமாரமங்கலம் பிரஹந்நாயகி அம்மை சமேத ரக்ஷாஜாதேஸ்வர சுவாமி கோவிலில் 16ம் தேதி  திருக்கல்யாணம் நடக்கிறது.  உற்சவத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு பஜனை நடக்கிறது. 16ம் தேதி காலை 7:00 மணிக்கு ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள்  சன்னதியிலிருந்து ஜானவாசகம், 8:00 மணிக்கு குரு கீர்த்தனை, திவ்யநாம சங்கீர்த்தனம், சிவ அஷ்டபதி பஜனை தீபபிரதட்சணம், 11:00 மணிக்கு  பிரஹந்நாயகி சமேத ரக்ஷாஜாதேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம், மதியம் 1:00 மணிக்கு நலங்கு, ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. விழாவில்,  வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சம்பத், கிருஷ்ணாலயா தியேட்டர் உரிமையாளர் துரை ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !