புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா
ADDED :3724 days ago
தொண்டி : தொண்டி அருகே நரிக்குடி கிராமத்தில் புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா 7 நாட்கள் நடந்தது. தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.