விருத்தாசலத்தில் சாமி சிலைகள் உடைப்பு: விருத்தாசலத்தில் பரபரப்பு!
ADDED :3783 days ago
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், கோவிலில் இருந்த சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து, சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் பூந்தோட்டம் காட்டுப் பகுதியில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் மது அருந்தி விட்டு, கோவிலில் இருந்த அங்காளம்மன், பாவாடைராயன் கற்சிலைகளை உடைத்து சேதப்படுத்தி, சுவாமி துணிகளை கிழித்தெறிந்தனர். தகவலறிந்த பூந்தோட்டம் பகுதி மக்கள் கோவிலில் திரண்டனர். சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.