நர்த்தன விநாயகர் கோவிலில் பாலாலயம்!
ADDED :3839 days ago
சேத்தியாத்தோப்பு: விருத்தாங்கநல்லுõரில் உள்ள பழமையான நர்த்தன விநாயகர் சன்னதி கட்டுமான திருப்பணிக்காக பாலாலயம் நடந்தது. சேத்தி யாத்தோப்பு அடுத்த வடக்கு விருத்தாங்கநல்லுõர் கிராமத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த நர்த்தன விநாயகர் கோவிலை புதுப்பித்திட கிராம மக்கள் முடிவு செய்து, நேற்று பாலாலயம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூ ர்ணாஹூதியை தொடர்ந்து விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனையை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு பாலாலயம் செய்யப்பட்டது. பூஜைகளை பாலாஜி அய்யர் நடத்தினார். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.