பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 2ம் தேதி பால் அபிஷேகம்
ADDED :3724 days ago
புதுச்சேரி:பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று நடக்க இருந்த, மூல நட்சத்திர பால் அபிஷேகம் 2ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி-தின்டிவனம் சாலையில், பஞ்சவடியில் உள்ள 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்று கிழமை மாலை 4:30 மணிக்கு, சிறப்பு பால் அபிஷேகம் நடத்தப்படும்.இன்று (28 ம் தேதி) மாலை 4:30 மணிக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நடக்க இருந்த பால் அபிஷேகம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டினால் நடத்தப்படுகிறது.இந்த தகவலை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், நிர்வாக அதிகாரி சந்திரமனோகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.