உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று பவித்ரோற்சவம் துவங்கியது.இக்கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், நேற்று மாலை, அங்குரார்ப்பணம், ஹோமம் ஆகியவற்றுடன் பவித்ரோற்சவம் துவங்கியது. இன்று காலை, 6:00 மணிக்கு, ஹோமம்; மாலை 4:00 மணிக்கு, சுவாமிக்கு ஆடை சாற்றி, உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.நாளை, காலை, 8:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம்; 9:00 மணிக்கு ஹோமம்; மாலை 5:30 மணிக்கு, திருவாராதனம்; இரவு 9:00 மணிக்கு வேத சாற்றுமறையுடன் உற்சவம் நிறைவுபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !