கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா
ADDED :3783 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா நடந்தது.இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதணை நடந்தது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி நடந்த செடில் உற்சவத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் செடில் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினர்.