உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு இடம் வழங்க முறையீடு

கோவிலுக்கு இடம் வழங்க முறையீடு

ஈரோடு: கோவில் கட்ட அனுமதிக்க கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஈரோடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி-1ல், விநாயகர் கோவில் உள்ளது. மேல்நிலை தொட்டி, சிறுவர் பூங்காவுக்கான இடத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது, என உயர்நீதிமன்றத்தில், அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் வழக்கு தொடர்ந்தார். கோவிலை அகற்ற மாநகராட்சிக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவிலை தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்ள வேண்டும் என்று, அப்பகுதியை சேர்ந்த உன்னி கிருஷ்ணன், நந்தகுமார், சக்திவேல் ஆகியோருக்கு, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது, காலக்கெடு முடிவடைந்த நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவிலை அகற்ற கூடாது. அதே இடத்தில் கோவில் தொடர அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் கோவில் கட்ட இடத்தை அளிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததால், போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !