உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேக விழா!

முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேக விழா!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு  ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாடு, லட்சுமி பூஜை ஆகியவற்றிற்கு  பின் 108 வலம்புரி சங்குகள், கும்ப கலசங்கள் ஆவாகனம் செய்து சக்தி பூஜை நடந்தது. தொடர்ந்து 108 மூலிகை பொருட்களால் யாகம் நடந்தது. ம ங்கள பொருட்களை, பூர்ணாகுதியில் சேர்ப்பித்தனர். மூலவர், உற்சவர் மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்த பின் 108 சங்காபிஷேகம்,  கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !