மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்!
ADDED :3728 days ago
வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே, தகட்டூர் ராமகோவிந்தன்காடு, மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா கடந்த, 19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், நெய், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அதன் பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி, நேற்று காலையில் நடந்தது. அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.