உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

நகரி: நகரி அடுத்த, சிந்தலப்பட்டடை கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், வரும், 31ம் தேதி அர்ச்சுனன் தபசும், ஆக., 2ம் தேதி, தீமிதி திருவிழாவும் நடக்கின்றன. மேலும், தினமும் இரவு 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா மற்றும் இரவு 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !