உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் பெருமாள் கோயிலில் விஷேச அலங்கார திருமஞ்சனம்!

கூடலழகர் பெருமாள் கோயிலில் விஷேச அலங்கார திருமஞ்சனம்!

மதுரை: மதுரை மாநகரில் 108- வைணவ திவ்ய தேசங்களில் 92-வது திவ்யதேசமும் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் 4-வது திவ்ய தேசமும் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மதுரை, நன்மை தருவர் கோவில் தெருவைச் சேர்ந்த கூடலழகர் பக்த சபையினர் பல ஆண்டுகளாக நித்ய பாராயணம் செய்து வருகின்றனர். இந்த சபையினரால் கூடலழகர் பெருமாள் கோயில் உற்சவர் சுந்தராஜ பெருமாளுக்கு 17ம் ஆண்டாக இந்த ஆண்டும் 2.8.2015  ஞாயிறு காலை 8.00 மணிக்கு விஷேச அலங்கார திருமஞ்சனம் நடைபெற உள்ளது.  இந்த சிறப்பு அலங்கார திருமஞ்சனத்தில் கலந்து கொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெறலாம் என கூடலழகர் பக்த சபையின் செயலாளர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !