சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா
ADDED :3767 days ago
புதுச்சேரி:காலாப்பட்டு அருகில் உள்ள பிள்ளைச்சாவடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில் நாளை (31ம் தேதி) குரு பூர்ணிமா விழா நடக்கிறது.அன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையில் சத்ய நாராயண பூஜை, பாபா பல்லக்கு உற்சவம், பகல் 12:00 மணிக்க ஆரத்தி நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு ராஜன் மற்றும் கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜன்ஸ், மாலை 6:00 மணிக்கு ஆரத்தி, இரவு 7:45 மணிக்கு பாபா சாவடி உற்சவம், இரவு 8:00 மணிக்கு ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா சேவா சேரிடபிள் டிரஸ்டியினர் செய்கின்றனர்.