தீர்த்தனகிரியில் நாளை செடல் திருவிழா!
ADDED :3767 days ago
கடலுõர்: தீர்த்தனகிரி சக்தி மாரியம்மன் கோவிலில் நாளை செடல் திருவிழா நடக்கிறது. குறிஞ்சிப்பாடி தாலுகாவைச் சேர்ந்த தீர்த்தனகிரி மேட்டுத் தெருவில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 33ம் ஆண்டு செடல் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி நாளை (31ம் தேதி) மதியம் 12:00 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழாவும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.