உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிப்பு!

சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிப்பு!

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ராஜகோபுரம் 133 அடி உயரமும், ஏழு அடுக்குகளையும் கொண்டது. கோபுரத்தின் உட்பகுதியில் ராமாயண காட்சிகளை விளக்கும் மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோபுரமும், அதில் உள்ளே உள்ள ஓவியங்களும் சிதிலமடைந்து வந்த நிலையில் அதை சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் படி கோபுர சிற்பங்களை சீரமைக்க 33 லட்சம் ரூபாயும், மூலிகை ஓவியங்களை சீரமைக்க 81 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன்படி கோபுர சிற்பங்கள் சரி செய்து முடிக்கப்பட்டது. ஓவியங்களை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக ஓய்வு பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் வீரராகவன் தலைமையில் ஒரு குழுவினர் சுசீந்திரம் வந்தனர். இந்த பணியில் 60 பேர் ஈடுபட்டுள்ளனர். இது முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகலாம் என வீரராகவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !