ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் சர்ச்சில் உண்டியலை உடைத்து திருட்டு
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குருசுக்கோயில், என அழைக்கப்படும் புனித சந்தாயகப்பர் சர்ச்சில், கோயில் திருவிழாவிற்காக வைத்திருந்த சிறப்பு உண்டியலை உடைத்து மர்ம நபர் திருடினார். "அவர் திருடும் காட்சி "சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் புனித சந்தியாகப்பர் சர்ச் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூலை 16 முதல் 25 ம் தேதி வரை திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா ஜூலை 25 ல் முடிவடைந்தது. இதில் திருவிழாவிற்காக சர்ச் நிர்வாகம் சார்பில் சிறப்பு உண்டியல் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் திருவிழா முடிந்தவுடன் நிர்வாகத்தின் ஜூலை 26 ல் உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்துவிட்டனர். இந் நிலையில் ஜூலை 27 ல் சர்ச்சில் இருந்த சிறப்பு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாதிரியார் ரவீந்திரன் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். சர்ச்சுக்கு வந்த எஸ்.ஐ., ஸ்டீபன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சர்ச்சில் இருந்த "சிசிடி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஜூலை 27 காலை 11 மணிக்கு சர்ச்சுக்குள் வந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து பணம் திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை வைத்து உண்டியலை உடைத்த மர்ம நபர்ரை போலீசார் தேடி வருகின்றனர். திருவிழாவிற்கு மறுநாள் நிர்வாகத்தினர் உண்டியல் பணத்தை எடுத்துவிட்டதால், பெரிய அளவில் பணம் திருடப்படவில்லை. பட்டப்பகலில் சுர்ச்சுக்குள் நுழைந்து உண்டியலை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.