பவளமலை முருகனுக்கு ஆக., 8ல் மகன்யாச பூஜை
ADDED :3765 days ago
கோபி: கோபி, பவளமலை முத்துக்குமார சுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னிட்டு, மகன்யாச அபிஷேகம் வெகு விமர்சையாக ஆக., 8ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6 மணிக்கு திருப்படி திருவிழா, 9 மணிக்கு சத்ரு சம்ஹார தரிசதை ஹோமம், காலை, 10.30 மணிக்கு மகன்யாச அபிஷேகம் நடக்கிறது. காலை, 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பகல், 12.30 மணிக்கு அலங்கார மகா தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மகன்யாச அபிஷேகத்துக்கு தேவையான, தேன், நெய், பால், தயிர், திருமஞ்சனப்பொடி, சந்தனம், பன்னீர், புஷ்பம் ஆகியவை விருப்பமுள்ளவர்கள் வழங்கலாம். தக்கார் மாலா, செயலர் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.