உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி கோயிலில் சிறப்பு பூஜை!

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி கோயிலில் சிறப்பு பூஜை!

தேவதானப்பட்டி: ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமி என்பதால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மஞ்சளாற்றங்கரையில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு, ஈஸ்வரன் கோயிலில் வழிபட்டு, பின்னர் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மேலும் குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !