புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா!
ADDED :3763 days ago
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா, பகவான் சத்ய சாய்க்குப் பிடித்தமான பக்தி பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பகவானின் நீண்ட கால பக்தரான சுரேஷ் வாட்கர், பகவானின் மகா சமாதி முன் அவர் மிகவும் விரும்பி ரசித்த பாடல்களைப் பாடினார். ஓம்கார ஸ்வரூபா... சத்குரு சமார்த்தா என்ற மராத்தி பாடலுடன் பஜனை துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு பிடித்தமான பாடல்கள் பாடப்பட்டன. கூடியிருந்த பக்தர்கள் பக்தி இசைமழையில் நனைந்து பரவசம் அடைந்தனர். நிறைவாக கலைஞர்கள் கவுரவிக்கப் பட்டனர். சுரேஷ் வாட்கர், 1980லிருந்தே பகவான் முன் பக்தி பாடல்களைப் பாடியவர் என்பது குறிப்பிடத் தக்கது.பஜனையின் நிறைவில் மங்கல ஆரத்தி காட்டப்பட்டது.