தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :3763 days ago
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது. ஜூலை 23 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஜூலை 29 ல் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோசம் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத்தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் பால்ராஜ், கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, செயல் அலுவலர் சீனிவாசராகவன், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஸ்ரீதர், அய்யப்பன், தொழில் அதிபர்கள் மூர்த்தி, குமார், சுரபி கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் கலந்து கொண்டனர். நாளை மாலை தெப்பஉற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.