உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

கடலூர்: கடலூர், மஞ்சக்குப்பம் பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில்  சாகை வார்த்தல் விழா நடந்தது. கடலூர், மஞ்சக்குப்பம் பகவதி கழுத்து  மாரியம்மன் கோவிலில்  சாகை வார்த்தல் விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. அதனையொட்டி தினமும்   காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு மகா  அபிஷேகமும், இரவு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை கரம் வீதியுலா வந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து சாகை வார்த்தலும், இரவு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !