செருவாமணியில் ஒன்பது கோவில்கள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
திருவாரூர் :நீடாமங்கலம் அருகே செருவாமணியில் திருக்கோவில்கள் மண்டல அபி ஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு கலசம் மற்றும் சங்கபிஷேகம் அதி விமர் சியாக நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே செருவாமணியில் காஞ்சி பெரியவாள் சங்காராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று பூஜித்த கோவில் களான புதுக்குளத்தங்கரை ஸ்ரீசித்திவினாயகர், முதலியார் தெரு ஸ்ரீ வீரசக்தி வினாயகர்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரி, ஸ்ரீ செல்லப் பெரு மாள் சாஸ்தா, ஸ்ரீ குறும்ப ஐயனார், ஸ்ரீமங்களாம்பாள் சமேத ஸ்ரீவன் மீகநாதர் உள்ளிட்ட பரிவாரமூர்த்திகள், ஸ்ரீபூமி நேய மூர்த்தி சமேத பிரசன்ன வெங்க டேச பெரு மாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் என ஒன்பது கோவில்கள் அப்பகுதி அக்ர ஹாத்தினர் கடந்த 1982 மற்றும் 2000 ஆண்டுகளில் புதுப்பித்து 9 கோவில்களை கும் பாபிஷேகம் நடத்தினர். 2015 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்ய ஜெய ராம ஐயர், ஸ்ரீராம் ஐயர் கொ ண்ட குழு அமைத்து கோவில்களில் புறணமைப் பு பணிகள் மேற்கொண்டர். பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த மாதம் 7 ம் தேதி பல்வேறு பூஜைகளைத்தொடர்ந்து புதுக்குள த்தங்கரை ஸ்ரீசித்திவினாயகர், முதலியார் தெரு ஸ்ரீ வீரசக்தி வினாயகர்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரி, ஸ்ரீ செல்ல ப்பெருமாள் சாஸ்தா, ஸ்ரீ குறும்ப ஐயனார் ஏழு கோவில் களில் கும்பாபி ஷேக ம் நடந்தது. மறுநாள் நான்காம் கால யாக பூஜையைத்தொடர்ந்து 10 மணிக் கு ஸ்ரீமங்களா ம்பாள் சமேத ஸ்ரீவன்மீகநாதர்,ஸ்ரீபூமி நேய மூர்த்தி சமேத பிரச ன்ன வெங்க டேச பெரு மாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் என இரு கோவில்கள் கும்பா பிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் காலை மண்டல அபி ஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு கலச பூஜை ேஹாமம் துவங்கியது. 9.00 மணிக்கு பூர்ணாஹூ திக்கு, ஸ்வரண தீபம், தீபாரதனையும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணியில் சிவாலயத்தில்மஹா கணபதி பிரார்த்தனை சங்கல்பம் 108 சங்கபிஷேகம், 108 கலசபிஷேகம் நடந்தது. இன்றும், நாளையும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீதர்ஐயர் தலைமையிலான விழா குழு வினர்கள் செய்து வருகின்றனர்.