உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சிக்கோட்டையில் ஆடி பவுர்ணமி விழா!

செஞ்சிக்கோட்டையில் ஆடி பவுர்ணமி விழா!

செஞ்சி: செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பால் அபிஷேகம் நடந்தது. செஞ்சி கிருஷ்ணகிரி  மலையடிவாரம் உள்ள பூவாத்தம்மன், ராஜகிரி மலையடிவாரம் உள்ள செல்லியம்மனுக்கு நேற்று ஆடி  வெள்ளி உற்சவம் நடந்தது. விழாவையெ õட்டி செஞ்சி  கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அபிஷேகம் செய்தனர். முன்னதாக  சுந்தரவிநாயகர், முகமாரியம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து காலை 12 மணிக்கு 200க்கும் மேற்பட்டவர்கள் பால் குடங்களுடன்  மாரியம்மன் கோவிலில் இருந்து செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பால் அபி÷ ஷகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் கிராம  மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !