துர்க்கையம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம்!
ADDED :3762 days ago
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் ஸ்ரீஅஷ்டபூஜை துர்க்கையம்மன் கோவிலில் 108 பால் குட அபிஷேகம் நடந்தது. முண்டியம்பாக்கம் அஷ்டபூ ஜை துர்க்கையம்மன் கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு கோ-பூஜை நடந்தது. காலை 11:00 மணிக்கு முண்டீஸ்வரன் கோவிலிலிருந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் கருணாகரன், சக்தி மாசிலாமணி ஆகியோரது தலைமையில் 108 பால் குட ங்களை, முக்கியவீதிகள் வழியாக ஊர்வலமாக துர்க்கையம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பக்தர்கள் துர்க்கையம்மனுக்கு பால் அ பிஷேகம் செய்தனர் . பின்னர் பாபு குருக்கள் சிறப்பு பூஜைகளை செய்தார். விழா ஏற்பாடுகளை ஜோதிடர் கமலக்கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் சாந்தி கருணாகரன் உள்ளிட்டோர் செய்திருந்திருந்தனர்.