சாலிகிராமத்தில் ஆடித்தபசு பெருவிழா கோலாகலம்
ADDED :3761 days ago
சாலிகிராமம்: சாலிகிராமத்தில், ஆடித்தபசு பெருவிழா, கோலாகலமாக நடந்தது. சாலிகிராமம், ஸ்ரீராமர் தெருவில் உள்ள, சங்கர நாராயணர் கோவிலில், கடந்த, 21ம் தேதி முதல் ஆடித்தபசு பிரம்மோற்சவம் துவங்கி, நடைபெற்று வருகிறது. அதில், 10ம் நாளான நேற்று காலை 6:00 மணி முதல், யாகசாலை பூஜை, சிவன் அபிஷேகம், கோமதி அம்மன் அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணி அளவில், முல்லை தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்திலிருந்து, பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சங்கர- நாராயணருக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சியளித்தல், கோமதி அம்மன் திருவீதிபுறப்பாடு, கோமதி அம்பாளுக்கு, சங்கர லிங்கேஸ்வரராக காட்சியளித்தல்ஆகியவை நடந்தன.