திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆடிப்பூர விழா ஆக.7ல் துவங்குகிறது
ADDED :3761 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா, ஆக.,7 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவாடானையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர், சிநேக வல்லி தாயார் கோயிலில் ஆடிப் பூரத்திருவிழா வரும் ஆக., 7 ல் காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.,15 மாலை 3 மணிக்கும், ஆக., 16 ல் தீர்த்தோத்ஸவம், ஆக.,17 ல் அம்பாள் தபசு, 18 ல் திருக்கல்யாணம், 19 ல் ஊஞ்சல் உற்சவம், 21 ல் மஞ்சள் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா நாட்களில் சிநேகவல்லிதாயார் அன்னம், கிளி, கமலம், குதிரை போன்ற வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் 22 கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.