ஸ்ரீவி.,குரு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3761 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஸ்ரீகுரு விநாயகர் கோயில் மகா கும்பாபிசேகம் நடந்தது. தாளாளர் குருவலிங்கம் குடும்பத்தினர் சென்னை மகரிஷி கல்விநிறுவன தாளாளர்கள் நமசிவாயம்,சுப்புராஜ் மற்றும் செயலர் பெருமாள், பள்ளி முதல்வர்கள் கமலா மற்றும் ரேவதி, துணைமுதல்வர் பிரியா, நிர்வாக அலுவலர் அழகர்சாமி, கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் ராமர் பங்கேற்றனர். வத்திராயிருப்பு சேது பட்டர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகம் செய்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்தனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் மம்சாபுரம், நரையன்குளம், கோட்டைபட்டி ஊர் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். பின்னர் அன்னதானமும் நடந்தது.