செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3761 days ago
கீழக்கரை :கீழக்கரை அருகே மாயா குளம், தச்சன்ஊரணி செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் உலக நன்மைக்காகவும், ஆடி பவுர்ணமியை முன்னிட்டும் விளக்கு பூஜை நடந்தது. மூலவர் பூரண, புஸ்கலா சமேத அய்யனாருக்கு அபிஷேக, ஆராதனைகளை பூஜாரி பெரியசாமி செய்தார். பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.கீழக்கரை மறவர்தெரு, மகாமாரியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.