உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தியம்மன் கோவில் ஆடித்திருவிழா!

புத்தியம்மன் கோவில் ஆடித்திருவிழா!

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை பவானி புத்தியம்மன் கோவிலில், 36ம் ஆண்டு, ஆடித்திருவிழா, சிறப்பாக நடைபெற்றது. கவரைப்பேட்டை  பவானி புத்தியம்மன் கோவிலில், 36ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. திரு விழாவை முன்னிட்டு, 12 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளில், அம்மனுக்கு, 1,008 சங்காபிஷேகம், நடைபெற்றது.  அன்று இரவு, மேள தாளங்கள், வான வேடிக்கையுடன் நடைபெற்ற  அம்மன் திருவீதி உலாவின் போது, பகுதிவாசிகள், வாசலில் கோலமிட்டு,  அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீதிஉலாவின் போது, சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசிக்க, கவரைப்÷ பட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !