உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை!

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை!

தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் அடுத்த  சித்தலூரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார  அர்ச்சனைகளும் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு  தீபமேற்றி வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.  ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். தர்மகர்த்தா பாஞ்சாலை, கோவிந்தசாமி, கண்ணன், பூசாரிகள் சுரேஷ், கோவிந்தன், ஏழுமலை,  ராமச்சந்திரன் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !