உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 63 நாயன்மார்கள் வீதியுலா: 108 திரு விளக்கு பூஜை!

63 நாயன்மார்கள் வீதியுலா: 108 திரு விளக்கு பூஜை!

திருவாரூர்: திருவாரூர் ஐ.பி.,கோவில்தெரு திரிபுர சுந்தரி திருமெய்ஞானேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை மற்றும் 63 நாயன்மார்கள் வீதியுலா காட்சி நடந்தது. திருவாரூர் ஐ.பி.,கோவில்தெரு திரிபுர சுந்தரி திருமெய்ஞானேஸ்வரி திருக் கோவிலில்  ஆண்டு தோறும் ஆடி மூன்றாம் வெள்ளியில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்து வருகிறது.  நேற்று முன் தினம் 18 ம் ஆண்டு திரு விளக்கு பூஜையில் அப்பகுதியசை் சேர் ந்த 108 சுமங்கலி பெண்ள் பங்கேற்று திருவிளக்கு பூஜை நடத்தினர். பக்தர்க ளுக்கு ஆலய அர்ச்சகர் மோகன் சிவாச்சாரியர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினார். முன் னதாக  63 நாயன்மார்கள் வீதியுலா காட்சி கோவிலில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது.  விழா ஏற்பாடுகளை திருவாரூர் அனைத்து செட்டியார் பேரமைப்பு நிர்வா கிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !