சுவாமி கீதானந்தாகிரி மகராஜின் 108வது குரு ஜெயந்தி விழா
ADDED :3807 days ago
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கம்பளிசாமி மடத்தில் சுவாமி கீதானந்தாகிரி மகராஜின் 108வது குருஜெயந்தி விழா நடந்தது.பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி கீதானந்தாகிரி மகராஜிக்கு, யோகாஞ்சலி நாட்டியாலயத்தின் தலைவர் ஆனந்த பாலயோகி தலைமையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முன்னதாக 1008 திருவிளக்கு பூஜையும், மாணவ, மாணவிகளின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவில் மீனாட்சிதேவிபவனாணி முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை யோகாஞ்சலி பொதுமேலாளர் சண்முகம், கஜேந்திரன் செய்திருந்தனர்.