உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் குருபூர்ணிமா பூஜை

பெரியகுளத்தில் குருபூர்ணிமா பூஜை

பெரியகுளம்: பெரியகுளத்தில் குருபூர்ணிமாவை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. குளோபல் ஆர்கனைசேஷன் பார்டிவைனிடி இந்தியா டிரஸ்டு சார்பில், பிரார்த்தனை மையத்தில் குருபூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 12 மணி நேரம் அகண்ட ஹரேராம நாமகீர்த்தனம் நடந்தது. இரண்டாம் நாளில், மகாமந்திர கூட்டுப்பிரார்த்தனையும், கிருஷ்ணருக்கு பூஜை மற்றும் குருபாதுகைக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோபகுடீரம் மாணவர்கள் "மதுரகீதம் பஜனை பாடல்கள் பாடினர். கிருஷ்ண சைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணர், குருபாதுகையுடன் நாமகீர்த்தனம் முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !