உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பசியாரில் கோவில் கும்பாபிஷேக விழா

தென்பசியாரில் கோவில் கும்பாபிஷேக விழா

மயிலம் : தென்பசியார் பெரியபாளையத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மயிலம் அடுத்த தென்பசியார், கிராம குளக்கரையில் உள்ள பெரியபாளையத்தம்மன், எல்லை பிடாரியம்மன், துர்கை, உமா மகேஸ்வரன், பால விநாயகர், பால முருகன், சப்த கன்னியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, முதல் யாக சாலை பூஜை, இரவு 8:30 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது.நேற்று காலை 4:00 மணிக்கு இரண்டாம் யாகசாலை வழிபாடு, 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, தொடர்ந்து 10:20 மணிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11:30 மணிக்கு பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவில் வளாகத்தை வந்தவுடன், பிற்பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது . மாலை 5:00 மணிக்கு கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து படைத்தனர். இரவு 7:00 மணிக்கு வேப்பிலை ஆடை கட்டிவந்த பக்தர்கள் தீமித்தனர். பின்னர் இரவு 9:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !