உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர் குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

பக்தர் குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளியில் பழமை வாய்ந்த பக்தர்குளம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.இதையொட்டி, வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து அம்மன் காமதேனு வாகனத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி, அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !