முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்!
புதுச்சேரி: பிள்ளைத்தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில், வரும் 7 ம் தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.பிள்ளைத்தோட்டம் ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி துவங்கி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (3ம் தேதி) அன்னபூரணி அலங்காரத்துடன் சுவாமி வீதியுல நடந்தது. நாளை (4ம் தேதி) மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 5ம் தேதி, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அலங்காரம், 6ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.முக்கிய திருவிழாவான திருத்தேர் உற்சவம் 7 ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8:30 மணி முதல் 9:00 க்குள், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ.,, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்துள்ளனர்.