காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் ஆடி திருவிழா
ADDED :3734 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அய்தர்பட்டரை தெரு கன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழா நேற்று, காப்பு கட்டிதுவங்கியது.சின்ன காஞ்சிபுரம், அய்தர்பட்டரை தெருவில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ரயில்வே சாலையில் உள்ள பரஞ்சோதி அம்மன் கோவிலில் பொங்கல் இட்டு பக்தர்கள் காப்பு கட்டினர். அங்கிருந்து பொங்கல் ஊர்வலமாக கொண்டு வந்து கன்னியம்மன் கோவிலில் சுவாமிக்கு படைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வரும் ஞாயிற்றுக்கிழமை காலை, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு, திருக்காலிமேடு சின்னவேப்பம் குளம் பகுதியில் இருந்து, அக்கினி சட்டி எடுத்து வந்து, கோவில் அருகில் தீமிதி திருவிழா நடைபெறும். அன்று இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.