மாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா
ADDED :3733 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் 25வது ஆண்டு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மன், கிருஷ்ணகிரி மலையடிவாரம் உள்ள பூவாத்தம்மன், ராஜகிரி மலையடிவாரம் உள்ள செல்லியம்மனுக்கு பால் குட அபிஷேகம் நடந்தது.இரவு 8 மணிக்கு மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிர்வாக குழு தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜேந்திரன், பொருளா ளர் செந்தாமரை மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.