உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் கோவில்களில் சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம் கோவில்களில் சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி 18 தினமான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.ஆடிப்பெருக்கையொட்டி ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் பொதுமக்கள் அதிகளவு தரிசனம் செய்தனர். மேலப்பழங்கூர் சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. திருவரங்கம் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் மூலவர், உற்வசருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !