கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா
ADDED :3733 days ago
கும்பகோணம்: கும்பகோணத்தில் பரதநாட்டிய மாணவிகளுக்கு சலங்கை பூஜை விழா நடந்தது. கும்பகோணம் அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில், பரதநாட்டியம் கற்று வரும் மாணவிகளுக்கு சலங்கை அணியும் விழா, எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் நடந்தது. முன்னதாக கலைமகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை நாகேஸ்வரன் கோயிலில் சலங்கைபூஜை நடைபெற்றது. திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, நடன பயிற்சியாளர்கள் விஜயமாலதி, குணா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், பரதநாட்டிய மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர்.