கலப்பை ஏந்திய கடவுள்!
ADDED :3734 days ago
விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் பலராமர். வசுதேவரின் மனைவியான ரோகிணிக்கு பிறந்தவர். அதிக பலம் பொருந்தியவர் என்பதால் பலராமர் என பெயரிட்டனர். கிருஷ்ணரின் அண்ணனான இவரை வைணவர்கள் நம்பி மூத்த பிரான் என அழைப்பர். கையில் கலப்பை தாங்கியிருக்கும் இவர் ஒருமுறை யமுனை நதியின் போக்கையே தன் கலப்பையால் திருப்பி விட்டதாக மகாபாரதத்தில் தகவல் உள்ளது. ஆனந்த தேசத்து அதிபதி வைரவதனின் மகள் ரேவதியை மணம் செய்த இவருக்கு திரிதன், உவமுகன் என இரு பிள்ளைகள் இருந்தனர். பாரதப் போரில் பலராமர் துரியோதனன் பக்கமும், கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் சேர்வதாக உடன்பாடு ஏற்பட்டது. தன் அண்ணனான பலராமரைத் தவிர்க்க நினைத்த கிருஷ்ணர், குருக்ஷேத்திர போருக்கு முன்பே அவரை தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி விட்டார்.