கடம்பவன முருகன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :3734 days ago
கடம்பத்துார்: கடம்பத்துாரில் உள்ள, கடம்பவ முருகன் கோவிலில், வரும் 8ம் தேதி, ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் அடுத்த, ஸ்ரீதேவிக்குப்பத்தில் அமைந்துள்ளது கடம்பவன முருகன் கோவில். இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, வரும் 8ம் தேதி, காலை 10:30 மணிக்கு, சூரியம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் புறப்பட்டு, காலை 11:00 மணிக்கு, கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு, விசேஷ மலர் அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு திருக்கல்யாணமும், மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.