உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கபாலீஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை விழா!

கபாலீஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை விழா!

மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் கோவிலில், பன்னிரு திருமுறை மற்றும் தெய்வச் சேக்கிழார் விழா, வரும், 11ம் தேதி துவங்குகிறது. மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் கோவிலில், வரும், 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் மாலை 5:00 மணிக்கு, திருமுறை விண்ணப்பமும், இரவு, 7:00 மணிக்கு, சொற்பொழிவும் நடைபெறுகிறது. வரும் ௧௧ம் தேதி, மாலை, ஓதுவார்கள் சற்குருநாதன் மற்றும் வாகீசன், வரும், ௧௨ம் தேதி, கரூர் சுவாமிநாத தேசிகர், ௧௩ம் தேதி, மதுரை பொன். முத்துக்குமரன், ௧௪ம் தேதி, திருச்சி முத்துக்கந்தசாமி தேசிகர், ௧௬ம் தேதி, சீர்காழி திருஞானசம்பந்தன், ௧௭ம் தேதி, பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் வெங்கடேசன், ௨௦ம் தேதி, திருத்தணி சுவாமிநாதன் போன்றோரின் திருமுறை இன்னிசை அரங்கு நடக்க உள்ளது.சொற்பொழிவில், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், பேராசிரியர் அருணை பாலறாவாயன், செந்தமிழ் அரசு சிவக்குமார், திருமந்திரச் செல்வர் பிரபாகரமூர்த்தி, முனைவர் இரா.செல்வக்கணபதி ஆகியோர் பங்கேற்கின்றனர். தினசரி, காலை 9:00 மணிக்கு, அம்பல வாணர் சந்நிதியில், கபாலி ஓதுவாரின், திருமுறை விண்ணப்பம் நடைபெறும். வரும், 23ம் தேதி காலை, அம்பலவாணர் சன்னிதியில் திருமுறை கண்டருளும் விழாவுடன், பன்னிரு திருமுறை, யானை ஊர்தியில் திருவீதி உலா நடைபெறும். மாலையில், சமயக்குரவர் நால்வருக்கும் சாந்தி அபிஷேகமும், திருமுறை இன்னிசையுடன் திருவீதி உலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !