உலக நன்மைக்காக பாத யாத்திரை!
திருப்பூர் : உலக நன்மைக்காக, திருப்பதியை சேர்ந்த ஒருவர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, அனுமன் ரதத்தை இழுத்துக் கொண்டு, பாத ய õத்திரை துவக்கியுள்ளார். அவர், ரதத்துடன் நேற்று திருப்பூர் வந்தார். திருப்பதி, திருமலா நகர் ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர் ஜெய் சீதாராம் ர மேஷ் சுவாமி, 45. இவர், அனுமன் ரதத்துடன் பாத யாத்திரையாக நேற்று திருப்பூர் வந்தார். பெங்களூரு, மைசூர், மங்களூர், கோழிக்கோடு, குரு வாயூர் வழியாக, 1,500 கி.மீ., தூரத்தை பாதயாத்திரையாக கடந்து, வந்துள்ளார். அவர் கூறியதாவது: ஐ.டி.ஐ., முடித்து, துபாய் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றினேன். 15 ஆண்டுக்கு முன், திருப்பதியில் உள்ள ஜாபாலி தீர்த்தத்தில், சிறிய ஆஞ்சநேயர் சிலை கிடைத்தது. அன்றிலிருந்து ஆன்மிக வழியில் செல்கிறேன். உலக நன்மைக்காக, 2007 முதல், 2011 வரை, 12,750 கி.மீ., தூரம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டேன். தற்போது, 1,500 கி.மீ., தூரம் கடந்து, தமிழகத்துக்குள் நுழைந்துள்ளேன். இந்த ரதத்தின் எடை, 800 கிலோ. தினமும், 30 முதல், 40 கி.மீ., தூரம் பாதயாத்திரை செல்வேன். ஈரோடு, திருச்சி வழியாக கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து காஷ்மீர் வரை, பாத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். காலில் செருப்பு அணிவதில்லை; துணி மட்டுமே கட்டியுள்ளேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மட்டுமன்றி, அமர்நாத் வரை கூட ரதத்துடன் சென்றுள்ளேன். இச்சக்தியை ஆஞ்சநேயர் வழங்கியுள்ளார். உழைப்பால் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும். இந்த ரதம் செல்லும் பாதையிலுள்ள மக்கள் அனைவருக்கும் அனுமன் அதற்கான சக்தியை வழங்குவார். திருப்பதியில் தனியாக ÷ காவில் அமைத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.