மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சிறப்பு தரிசனம்
ADDED :3732 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தரிசனம் செய்தார்.மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் சுரேந்திரன், அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, தொழிற்சங்க செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன், நகர பொதுச் செயலாளர் குமாரலிங்கம் ஆகியோர் அமித்ஷாவை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று மாலை 3.50 மணிக்கு அழைத்து வந்தனர். கோயில் சார்பில் இணை கமிஷனர் நடராஜன் வரவேற்றார்.கோயில் சிறப்புக்கள் குறித்து நிர்வாகிகள் விளக்கினர். பொற்றாமரைகுளத்தில் இருந்து தெற்கு கோபுரத்தின் சிற்பங்கள், சிறப்புக்களை பார்த்து அமித்ஷா வியந்தார். 45 நிமிடங்கள் கோயிலுக்குள் இருந்தார்.