காக்க வேணும் கருப்பையா
மலையாளக் கருப்பய்யா சாமியே
மங்களங்கள் தரவேணும் - எங்கள்!
கோட்டைக் கருப்பய்யா - சாமியே
குலநலம் காக்க வேணும்
சங்கிலிக் கருப்பய்யா சாமியே
சந்ததிகள் தழைக்க வேணும் - எங்கள்
நொண்டிக் கருப்பய்யா - சாமியே
நோய் நொடிகள் தீர்க்க வேணும்
தொட்டியத்துக் கருப்பய்யா சாமியே
துணைவந்து காக்க வேணும் - எங்கள்
முன்னோடிக் கருப்பய்யா - சாமியே
முன்னேவந்து காக்க வேணும்....
கொரட்டிவாழ் கருப்பய்யா சாமியே
கூடவந்து காக்கவேணும் - எங்கள்
திட்டாணிக் கருப்பய்யா - சாமியே
திடம் தந்து காக்கவேணும்
கட்டுச்சோத்துக் கருப்பய்யா சாமியே
கருணையுடன் காக்கவேணும் - எங்கள்
உறங்காப்புளிக் கருப்பய்யா - சாமியே
உடன்வந்து காக்க வேணும்....
வல்லயம்பதிக் கருப்பய்யா சாமியே
வாழவழி காட்டவேணும் - எங்கள்
சந்தனத்துக் கருப்பய்யா -சாமியே
சந்ததிகள் காக்கவேணும்
பதினெண்படிக் கருப்பய்யா சாமியே
பலம் தந்து காக்க வேணும் - எங்கள்
தேரடிக் கருப்பய்யா - சாமியே
திவ்யமுடன் காக்க வேணும்
ராங்கியுத்துக்குக் கருப்பய்யா சாமியே
பாங்குடனே துணைவரணும் - எங்கள்
செங்கடாக் கருப்பையா - சாமியே
சங்கடங்கள் தீர்க்கவேணும்
கின்னக் கருப்பய்யா சாமியே
செல்வ வளம்தரவேணும் - எங்கள்
பெரிய கருப்பய்யா சாமியே
பெரும்வாழ்வு தரவேணும்
பதினெட்டுப் படியாளும் எங்கள்
பந்தளத்துக்கு கருப்பய்யா - இந்தப்
பக்தர்நலம் காத்திடவே - சாமியே
பக்கத்துணை வரவேணும்.